Monday, July 5, 2010

குயிலின் ஓசையும்
காகத்தின் ஓசையாய்,
மண் வாசனையும்
பிண வாசனையாய்,
சிறு துளி மழையும்
பேரு வெள்ளமாய்,
அழகிய வானவில்லும்
வலுவிழந்த வில்லாய்.....

"உந்தன் பிரிவினால் "

Monday, May 17, 2010

என் விட்டுக்
கண்ணாடிகளும்
சந்தோசமாய் இருக்கிறது
சமிப காலமாய்
என்னை போல...

"உன்னில் என்னை காண்பதனால் "

Wednesday, May 12, 2010

கனவுலகம்









உண்மை உலகம்
பொறமை கொண்டது..

கனவுலகில்
சேர்ந்து வாழும்
நம் இருவரையும் கண்டு.....

Monday, May 10, 2010


பின்னோக்கி பார்க்கிறேன்..
நான் எழுதும்
கிறுக்கல்களைக் கண்டு
சிரிக்க சில நண்பர்கள்
ரசிக்க சில நண்பர்கள்
சிந்திக்க சில நண்பர்கள்



சீண்டிட சில நண்பர்கள்
என வேடதாங்கள் பறவையாய் இருந்தேன் ..



 
 



முன்னோக்கி பார்கிறேன்
இவர்கள் யாருமின்றி
சோலைவானத்திலும்
பாலைவனத்தில் இருப்பதுபோல்......

கடற்கரை









வண்ண வண்ணமாய்
கூட்டங்கள்,
கவலையை மறந்திட சிலபேர்
மகிழ்ச்சியை பங்கிட சிலபேர்
குடும்பத்துடன் சிலபேர்
குடும்பங்கள் ஆகப்போகிற சிலபேர்
நண்பர்களுடன் சிலபேர் என
உன்னை நோக்கி தினமும்...

எங்கே உனது தொடக்கம்,
எங்கே உனது முடிவு என
அறிந்தவர் யாவருமிழர்...

உனது பரந்த விரிந்த எல்லையைப் போலவே
உந்தன் மனதோ ?
உன்னை நோக்கி வருமனைவருக்கும்
சந்தோசத்தை மட்டுமே கொடுக்கிறாயே,

யார் கற்றுக் கொடுத்தது
தாயா, தந்தையா அல்ல மூததையாரா
உனக்கு,

உனைகாணவரும் எம்மக்களுக்கும்  சொல்லிகுடு
அந்த ரகசியத்தை,,
எப்படி அனைவரையும் சந்தோசமாய்
வைத்துக்கொள்வது என்று.....

உன்வருகைக்காக

என்னைப் போலவே
எந்தன் கவிதைகளும்...

அம்மாவிடம் கோவிலுக்கு
செல்வதாக சொல்லிவிட்டு காத்திருந்தேன் 
தெருமுனையில் உன்வருகைக்காக ...

யாரோ தீண்டியதுப்போல் உணர்வு,

திரும்பிபார்த்தேன்
சற்றுத் தொலைவில்
காத்திருக்கிறது

"என்னைப் போலவே
எந்தன் கவிதைகளும்..."

Friday, May 7, 2010





கார்த்திகை மாத
கடும் பணி துளிகளும்
காணமல் போக மறுக்குதடி
கதிரவனைக் கண்டு
"அழகே உன்னை திண்டாமல் "