Monday, July 5, 2010

குயிலின் ஓசையும்
காகத்தின் ஓசையாய்,
மண் வாசனையும்
பிண வாசனையாய்,
சிறு துளி மழையும்
பேரு வெள்ளமாய்,
அழகிய வானவில்லும்
வலுவிழந்த வில்லாய்.....

"உந்தன் பிரிவினால் "

Monday, May 17, 2010

என் விட்டுக்
கண்ணாடிகளும்
சந்தோசமாய் இருக்கிறது
சமிப காலமாய்
என்னை போல...

"உன்னில் என்னை காண்பதனால் "

Wednesday, May 12, 2010

கனவுலகம்









உண்மை உலகம்
பொறமை கொண்டது..

கனவுலகில்
சேர்ந்து வாழும்
நம் இருவரையும் கண்டு.....

Monday, May 10, 2010


பின்னோக்கி பார்க்கிறேன்..
நான் எழுதும்
கிறுக்கல்களைக் கண்டு
சிரிக்க சில நண்பர்கள்
ரசிக்க சில நண்பர்கள்
சிந்திக்க சில நண்பர்கள்



சீண்டிட சில நண்பர்கள்
என வேடதாங்கள் பறவையாய் இருந்தேன் ..



 
 



முன்னோக்கி பார்கிறேன்
இவர்கள் யாருமின்றி
சோலைவானத்திலும்
பாலைவனத்தில் இருப்பதுபோல்......

கடற்கரை









வண்ண வண்ணமாய்
கூட்டங்கள்,
கவலையை மறந்திட சிலபேர்
மகிழ்ச்சியை பங்கிட சிலபேர்
குடும்பத்துடன் சிலபேர்
குடும்பங்கள் ஆகப்போகிற சிலபேர்
நண்பர்களுடன் சிலபேர் என
உன்னை நோக்கி தினமும்...

எங்கே உனது தொடக்கம்,
எங்கே உனது முடிவு என
அறிந்தவர் யாவருமிழர்...

உனது பரந்த விரிந்த எல்லையைப் போலவே
உந்தன் மனதோ ?
உன்னை நோக்கி வருமனைவருக்கும்
சந்தோசத்தை மட்டுமே கொடுக்கிறாயே,

யார் கற்றுக் கொடுத்தது
தாயா, தந்தையா அல்ல மூததையாரா
உனக்கு,

உனைகாணவரும் எம்மக்களுக்கும்  சொல்லிகுடு
அந்த ரகசியத்தை,,
எப்படி அனைவரையும் சந்தோசமாய்
வைத்துக்கொள்வது என்று.....

உன்வருகைக்காக

என்னைப் போலவே
எந்தன் கவிதைகளும்...

அம்மாவிடம் கோவிலுக்கு
செல்வதாக சொல்லிவிட்டு காத்திருந்தேன் 
தெருமுனையில் உன்வருகைக்காக ...

யாரோ தீண்டியதுப்போல் உணர்வு,

திரும்பிபார்த்தேன்
சற்றுத் தொலைவில்
காத்திருக்கிறது

"என்னைப் போலவே
எந்தன் கவிதைகளும்..."

Friday, May 7, 2010





கார்த்திகை மாத
கடும் பணி துளிகளும்
காணமல் போக மறுக்குதடி
கதிரவனைக் கண்டு
"அழகே உன்னை திண்டாமல் "
முழு மதியுடன்
சுற்றித் திரிந்த என்னை
அரை மதியுடன்
சுற்ற வைத்து விட்டாயே
"இள மதியே உந்தன் நினைவுகளுடன் "

அக்னி வெயில்

அழகே
உனக்கென்ன
விடுமுறையில் சென்றுவிட்டாய்
சூரியனும் கோபம் கொண்டு
சுட்டெரிக்குதடி
உன்னைக் காணமல்
"  அக்னி  வெயி்லாய்    "

வலி

80 கிலோ எடையை
சாதரணமாக தூக்கும்
சுமை தூக்குபனுக்கு
ஏனோ வலித்தது 
8 கிராம் தங்கத்தை தூக்கி
வாங்கியபோது....

நினைவுகள்

பகலுக்கு- ஒற்றை சூரியன்
இரவுக்கு - ஒற்றை நிலவு
எனக்கு - உந்தன் ஒருத்தியின்
நினைவுகள் ......

அழகிய இடம்

உலகில்  மிக உயரமான இடம்
எது என்றாய்,
எவரெஸ்ட் என்றேன்..
அழகான நதி நைல் நதி என்றேன்,
அழகிய இடம் எது என்றாய்,
அமைதியாய்  பார்த்தேன்
நீ வாழ்ந்துக்கொண்டிருக்கும்
எந்தன் இதயத்தை......

Tuesday, May 4, 2010


அனில் அம்பானியும்,
அரக்கோணம் அம்பியும்
வெவ்வேறு அல்ல
சுனாமி அலைகளுக்கு...

அமெரிக்கா பூமியும்,
ஆப்ரிக்கா பூமியும்
வெவ்வேறு அல்ல
நிலநடுக்கத்திற்கு ...

ஏழை பணக்காரன்
என்று பிரித்துப் பார்ப்பது மட்டும்
ஏனோ
"இந்த சமூதாயம்"







பட்டு புழுக்களும்
சந்தோசமாய் இறக்கின்றதடி,
சொர்கத்தை சென்று அடைகிறோம் என்று....

Wednesday, April 28, 2010

முரண்பாடு











"கடவுள் இல்லை"
என்கிற பேச்சுப் போட்டியில்
முதல் பரிசை
வாங்கியவுடன்
நன்றிக் கடனாக
தேங்காய் உடைத்தான்
மாணவன், 
"கடவுளுக்கு".

சித்திரை நிலவு

தெளிவற்ற நீரில்
தெளிவாய்
தெரிந்தது
உந்தன் பிம்பம்...
சிரித்த முகத்துடன்
சித்திரை நிலவாய்
வானத்தில் நீ.....

Monday, April 26, 2010

காதல்

நான்கு பேர் பார்த்து
இருவர் பரிமாற்றம் செய்து
ஒருவர் ஆகிறது தான்

                               

Thursday, April 22, 2010

உனது வாழ்க்கையில்
எப்படி இருக்க வேண்டும்
என்று கேட்டாய் அன்று நீ,
என்றுமே சிரித்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்றேன் நான்...
நான் இருக்கும் போது அது
 கண்டிப்பாக நடக்கும் என்றாய் நீ...
அப்பொழுது  புரியவில்லை,
இப்பொழுதுதான் புரிகிறது....
பைத்தியக்காரனாய் சிரித்துக்கொண்டு
அலைகிறேன் சாலையில் நான்,
லண்டனில் சந்தோசமாய் வேருஒருவனுடன் நீ....






நான் கொலை குற்றத்தை விட
கொடுரமான குற்றத்தைக் கூட
செய்திருக்கலாம் ...
அதற்கு  நீ
ஆயுள்  தண்டனையோ,
ஏன் மரண தண்டனையோ கூட கொடுத்திருக்கலாம்
ஆனால் நீயோ அதை விட கொடுற   தண்டனையாக
30   நாட்கள்  vacation
கொடுத்து   வீ ட்டிற்கு அனுப்ப நினைக்கரையே ..
உன்னைப் பார்க்காமல் எப்படி இருப்பேன்
எனது அருமை பல்கலைக்கழகமே ....

Tuesday, April 20, 2010







புடவையில் அழகான
காஞ்சிபுரத்து பட்டுப் புடவையும்
பொறமை கொண்டதடி
கேரளத்து புடவையின் மீது..
" அழகியாய்  இருந்த உன்னை
பேரழகியாய்  காட்டியதனால்"

பிப்ரவரியின் சிறப்பு












எல்லோருக்கும் தெரியும்
பிப்ரவரி சிறப்பானதற்கு காரணம்
லீப் வருடமும், காதலர் தினமும் தான் என்று
ஆனால் எனக்கு மட்டுமே தெரியும்
என்னவள் அந்த மாதத்தில்
பிறந்த காரணத்திலால் தான் என்று ....

Monday, April 19, 2010










ஜோசியர் சொன்னார்
இன்று முதல்
ரோகிணி நட்சிதிரத்திற்கு
சனி ஆரம்பம் என்று....
அவருகென்னத்  தெரியும்
ரோகிணி நட்சத்திரம் அல்ல
"நிலவு"  என்று.....       

எந்த ஓர் உடற் பயிற்சியுமின்றி
ஒரு  வாரத்தில் 5 கிலோ
எடை  குறைந்துவிட்டேன்...
" என்னவளுக்கு உடம்பு சரியில்லையாம்  "
அவளுக்கு என்னாச்சு என்று
எனக்கு தெரியவில்லை,
சுட்டரிக்கும் வெயிலையும்,
கடும் பனியிலும் சுற்றித் திரிந்த
பல நாட்களில் ஒரு முறைக் கூட
திரும்பி பார்க்காதவள்,
இன்று என்னைப் பார்த்ததுடன்
சிரிக்கிறாள் ,
நெஞ்சினில் சாய்ந்துக்கொண்டு
ஏதேதோ பேசுகிறாள்,
சாதம் ஊட்டி விடுகிறாள்,
மதியவேளையில் படத்திற்கு
அழைத்து செல்கிறாள்,
மாலை  நேரத்தில் கடற்க்கரையில்
எனது  இருக்  கைகளையும்
பிடித்துகொண்டு செல்கிறாள்....
இந்த சந்தோஷத்தில் அவளது மடியில்
நான் அப்படியே உறங்கி கொண்டிடிருந்த பொழுது
"சனியனே கல்லூரிக்கு கூட போகாமல் இவ்வளவு
நேரம் தூக்கமா "
என்று நண்பன் திட்டி எழுப்பும் போதுதான்
தெரிந்தது "
இவை அனைத்தும் கனவு என்று".......
சாமி  வரம் கொடுத்தாலும்
பூசாரி தர மறுப்பராம் பழமொழி
உண்மை தான் போல பெண்ணே....
நீ கூட என்னை காதல் செய்துக்கொள்
என்று சாமியைப்  போல வரம் கொடுத்துவிட்டாய்
ஆனால் உன் தகப்பனோ பூசாரிப்போல்
தர மறுக்கிறறே.......
காதல் சொர்கம் தான்
காதலனும் காதலியும்
சேர்ந்து வாழும்பொழுது ....
அதே காதல் நரகம் தான்
பெற்றோர் மற்றும் உறவினர்களின்
அன்பு இல்லாமல் வாழும்பொழுது .......


Sunday, April 18, 2010

குயில் அழகுதான்
கூவும்பொழுது
மயில் அழகுதான்
தோகை விரித்து ஆடும்பொழுது
மேகம் அழகு தான்
மழையாய் பேயும்பொழுது
அந்த மழையும் அழகுதான்
அளவாக பெய்யும் பொழுது
நிலவு அழகுதான்
இரவினில்  தோன்றும்பொழுது
சூரியன் அழகுதான்
மாலையில் மறையும்பொழுது
இறைவன்  அழகுதான்
நாம் கேட்பதைக் கொடுக்கும் பொழுது
அதைபோல்  மாணவர்களே
 நீங்களும் இந்த உலகத்திற்கு அழகுதான்
சாதிக்கும் பொழுது........

Saturday, April 17, 2010

நிலவினில்
ஓர்  அதிசிய கண்டு்பிடிப்பாம்
சில இடங்களில்
இரத்த துளிகள் என்று....
ஆம் என்னவளின்
நிலவு போன்று
வட்டவடிவான  முகத்தில்
சிவப்பு வண்ண
"சாந்து பொட்டு"....

அப்படியா ?

ஆண்கள்  எல்லோரும்
ஒருவருக்கொருவர்
சண்டையிட்டுகொண்டும்,
தாடியுடனும்  அலைந்துகொண்டு
இருக்கிறார்கலாம் தேவலோகத்தில் ......
பாவம்
என்னவள் அங்கேயூம்
சென்று இருப்பால் போல........

Thursday, April 15, 2010

ஆசை



பனிரெண்டு வருடத்திற்கு
ஒரு முறை   பூக்கின்ற 
குறிஞ்சி பூவும் ஆசைப்பட்டது
அடுத்த ஜென்மத்திலாவது

மல்லிகை பூவாய் பிறக்கவேண்டும் என்று
என்னவளின்  தலையில்  சூடுவதற்காக.....


              
 


                                                           
 

கடவுள் ஓர் முட்டாள்

காதல் என்பது
முட்டாள்களின் செயல் என்றால்
கடவுளும் ஓர் முட்டாள் தான்...
ஆம் இந்து மதத்தில்
சிவபெருமான்- பார்வதி
விஷ்ணு - லட்சுமி
முருகன்-தெய்வானை, வள்ளி
காதலளித்து  தானே திருமணம் செய்தார்கள்....
அறிவியல் ஆசானின் மூலம்
அறியாத ஒன்றை
அறிந்தேனடி  உந்தன் மூலம்
" ஒவ்வொரு விசைக்கும்
  ஓர் எதிர் விசை உண்டு இன்று "
ஆம்
பார்த்ததோ உந்தன் கண்கள்
விழுந்ததோ எந்தன் இதயம்......

Tuesday, April 13, 2010

who is big?


          பிரபஞ்சத்தில் பெரியது
          நிலவும் சூரியனும் என்பார்கள்...
          அந்த நிலவின் பார்வையோ குளிர்ச்சி
          சூரியனின் பார்வையோ வெப்பம்
          மட்டுமே...
       ஆனால் பெண்ணே
       சில சமயம் குளிர்ச்சியான பார்வையும்
       சில சமயம் வெப்பமான பார்வையும்
       கொடுக்கும் உன்னை
       என்னவென்று சொல்வது....?


அநியாயம்

நீ எனக்கு எதிரியும் அல்ல
நான் உனக்கு விரோதியும் அல்ல
பின்பு ஏன் தொட்ட உடன்
உயிரை பறித்துக்கொள்கிறாய்
              " மின்சாரமே "

Saturday, April 10, 2010

பிறப்பா- இறப்பா

அன்று நீ
என் வாழ்வினில் வந்தபொழுது
எனது  பெற்றோறையும்  உறவினரையும்
சிரிக்க  செய்தாய்,
ஆனால்
எதிரியையோ  அழுதிட செய்தாய்.....
இன்று இவன்
என் வாழ்வினில் வந்தபொழுது
எனது  பெற்றோறையும்  உறவினரையும்
மட்டுமின்றி
எதிரியையும் அழுதிட செய்தான் 
" மரணத்தின் வலியே பெரியது "

தொலைந்துபோன உறக்கம

எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்
என் வாழ்வினில்
நீ வேண்டாம்  வேண்டாம்
என்றபொழுது வந்தாய்
சாதிக்கும் பொழுது
சாதிப்பதை தடுத்து சென்று விட்டாய்
இன்றோ
நீ வேண்டும் என்கிறேன்
வாழ்வினில்
வராமல் போகின்றாயே
என் தொலைந்துபோன உறக்கமே.....
நீ
என்ன கல் நெஞ்சம் கொண்டவளா?
குழந்தையிலிருந்து
குமரன் வயது வரை
உந்தன் பின்பு தானே  சுற்றுகிறேன்
பின்பு 
ஏன் என்னுடன் மட்டும்
சேர மறுக்கிறாய்...?
  " எனது படிப்பே "  

Tuesday, April 6, 2010

பேராசை




பட்டாம்பூச்சியூம்
தனது ஆயுட்காலத்தை
நீட்டிக்க வேண்டி இறைவனிடம்  கேட்டது,
அவளின் முகத்தை காண
                                                     சில நாட்கள் போதாது என்று....
பல வருடங்களாய் அழுகுரல்
    வீட்டினில் சோகமாய் அன்று ,
தினமும் அழுகுரல்
    வீட்டினில்  சந்தோசமாய் இன்று
            "மழலை பிறப்பு "

தற்கொலை

எந்தன் இதயத்தில்
என்னவள் உறங்குகிறாள்
என்று
எந்தன் இதயம்
துடிக்காமல் நின்றதன் விளைவு
" தற்கொலை "

அவதாரம்

கடவுள் இராமரின் அவதாரம் பத்து,
பூமியில்  நீ இருப்பது தெரிந்து இருந்தால்
பதினோராவது அவதாரம் எடுத்திருப்பார்
அது உன்னை அழிக்க அல்ல,
உன்னை அடைய....(உன்னுடன் வாழ) 
சில சமயம் மட்டும்
திரும்பி பார்த்த உன்னை
வாழ்க்கை முழுவதும்  என்னையே
பார்க்க வைத்து விட்டேன் பார்த்தாயா?
          இப்படிக்கு
          புத்தகம்

சுனாமி

என்னவளே
கடலோரம் செல்லாதே
மற்றொரு  சுனாமியை
இவ்வுலகம் தாங்காது....

ஓளி விளக்கு

நீ எனது பெற்றோரும் அல்ல
எனது உடன் பிறப்பும் அல்ல
ஏன் இரத்த பந்தமும் அல்ல
இருப்பினும்
உன்னையே  சுட்டெறித்துக கொண்டு
என் வீட்டீற்கு மட்டுமின்றி
என் வாழ்விற்கும் வெளிச்சம் கொடுத்த நீ
என் வீட்டின் மின் விளக்கல்ல
எனது வாழ்வின் " ஓளி விளக்கு"

Monday, April 5, 2010

அதிசியப்பிறவி

நானும் ஓர்
அதிசியப்பிறவி தான்,
எந்தன் இதயத்தை
என்னவளிடம் கொடுத்துவிட்டு
இதயமின்றி உயிர் வாழ்கின்றனே.....

ஆயுள்தண்டனை

கல்லூரிக் காலங்களில் சரியாக
கல்லூரிக்கு செல்லதலால்,
ஆயுள்தண்டனையாய் கிடைத்தது
காலம் முழுவதும்
கல்லூரியிலே பணி  செய்யும
பேராசரியர்  பணி....